மத்திய மின்வேதியியல் ஆய்வகமான ‘சிக்ரி’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மண்வளம் அறியும் கருவியில், கூடுதலாக ஜி.பி.எஸ்., வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.மண்ணின் வளம் அறிய விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்துக்கு செல்வதுடன், முடிவுக்காக பல நாட்கள் காத்திருப்பர். அதனால், விவசாயிகளே விளைநிலத்தில் மண்ணின் கார, அமில தன்மை, மின்கடத்தும் திறனை கண்டறியும் வகையில், மண்வளம் அறியும் கருவியை சிக்ரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை கடந்த ஆண்டு மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இக்கருவியில் கூடுதலாக ஜி.பி.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது.ஜெ.மதியரசு, முதன்மை விஞ்ஞானி: மண் பரிசோதனை கருவி மூலம் மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் அளவை துல்லியமாக அறியலாம். தற்போது ஜி.பி.எஸ்., வசதி செய்யப்பட்டுஉள்ளதால், மண் பரிசோதனை செய்யும் இடத்தை கண்டறிய முடியும். மிக குறைந்த விலையில் இக்கருவியை விவசாயிகளுக்கு வழங்க மத்திய வேளாண்துறை முயற்சித்து வருகிறது. தனியார் வேளாண் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இதன் வசதியை அறிந்துள்ளன. எதிர்காலத்தில் இதன் மூலம் மண்ணுக்கு தேவையான உரங்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்துவர், என்றார்.