சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் – 1 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின.டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசுப் பணியாளர் தேர்வாணையம், 85 பணியிடங்களுக்காக நடத்திய, குரூப் – 1 முதல் நிலை தேர்வில், 4,500 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, 2017ல், முதன்மைத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள்,2018 டிசம்பர், 31ல் வெளியிடப்பட்டன.இதில் தேர்ச்சி பெற்ற, 176 பேருக்கு, 21ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, நேர்முகத் தேர்வு நடந்தது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள், நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன.அதில், இளவரசி என்பவர், 650.5 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சங்கீதா, 649 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாமிடம்; இலக்கியா, 642 மதிப் பெண்களுடன், மூன்றாம் இடம்; மந்தாகினி, 641 மதிப்பெண்களுடன், நான்காம் இடமும் பெற்றுள்ளனர்.அதேபோல், தேர்ச்சி பெற்றவர்களில், 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.