அண்ணா பல்கலை.க்கு டிஜிட்டல் நூலகம்: 1958 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 1958 ஆம் ஆண்டு பிரிவு முன்னாள் மாணவர்கள் ரூ. 10 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் நூலகத்தை உருவாக்கித் தந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 1958 ஆம் ஆண்டு பிரிவு மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 1958 ஆம் ஆண்டு 125 மாணவர்கள் பொறியியல் படிப்பை மேற்கொண்டனர். இவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பணியாற்றி ஓய்வுபெற்றனர். இவர்களில், 50 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இவர்கள் 50 பேரும் சேர்ந்து ரூ. 10 லட்சம் செலவில் டிஜிட்டல் நூலகம் ஒன்றை பல்கலைக்கழக வளாகத்தில் உருவாக்கித் தந்துள்ளனர். 20 கையடக்க கணினிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் குளிரூட்டி வசதியுடன் கூடிய இந்த டிஜிட்டல் நூலகத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா திறந்துவைத்தார்.

error: Content is protected !!