பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
2019 மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் வருகிற 14 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளதால், தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 18, 19 ஆகிய இரு தேதிகள் கால நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது

error: Content is protected !!