குரூப் 4 தேர்வில் தட்டச்சர் பணியிடத்துக்கு தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 21-ஆம் தேதி முதல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள தட்டச்சர் இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 11-இல் நடந்தது. எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் விவரங்கள் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பாரிமுனை அருகேயுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 21-ஆம் தேதி முதல் நடைபெறும்

error: Content is protected !!