நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்துக்காக ஜன.21ஆம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக வரும் மார்ச்  2 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற “அருள்மிகு நாகராஜா திருக்கோயில் தேரோட்ட திருவிழா கடந்த ஜனவரி 21 ஆம் தேதி  நடைபெற்றது. இதை முன்னிட்டு,  அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக  பிப்ரவரி மாதம் 16  ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக  அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனிடையே, அன்றைய தினத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளதால் மார்ச் 2ஆம் தேதி சனிக்கிழமை மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!