இந்திய ராணுவ கல்லுாரி ‘அட்மிஷன்’: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: ‘இந்திய ராணுவ கல்லுாரியில் படிக்க விரும்புவோர் மார்ச் 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்’ என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள அறிவிக்கை: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில் 2020 ஜன.1ல் 7ம் வகுப்பு படிப்பவர்கள் அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படிப்புக்கு சேர்க்கப்படுவர். அவர்கள் 11 வயது ஆறு மாதம் முதல் 13 வயதுக்குள் இருக்க வேண்டும்.தகுதியான மாணவர்களுக்கு சென்னை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் வரும் ஜூன் 1 2ல் நுழைவு தேர்வு நடத்தப்படும். ஆங்கிலம் கணிதம் மற்றும் பொது அறிவு என இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கும். அதில் கணக்கு மற்றும் பொது அறிவு வினாக்களுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே விடை அளிக்க முடியும்.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அக்டோபர் 4ல் நேர்முக தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேடு முந்தைய தேர்வுகளுக்கான வினாத்தாள் தொகுப்பு போன்றவற்றை டேராடூன் இந்திய ராணுவ கல்லுாரிக்கு விண்ணப்பம் அனுப்பி பெற வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வழங்கப்படாது.விண்ணப்பங்களை இரண்டு படிவமாக பூர்த்தி செய்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு மார்ச் 31 மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களை www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!