பல்கலைக் கழகங்களுக்கிடையேயான வாள்வீச்சுப் போட்டியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான வாள் வீச்சுப்  போட்டிகள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 150- க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சார்ந்த வாள் வீச்சு வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.  இதில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வாள் வீச்சு அணியினர் 5 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடம் பிடித்தனர்.
சேபர் குழு பிரிவில்  கன்னியாகுமரி  புனித அல்போன்சா கல்லூரி மாணவிகள்ஷிபானி, அனுலின், திவ்யா மற்றும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி மாணவிகள் அபிராமி, வெள்ளத்தாய்  ஆகியோர் இணைந்து வெண்கலப் பதக்கம் பெற்றனர். தனி நபர் பாயில் போட்டியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவி சண்முகப்பிரியா வெண்கலப் பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவிகளை  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கி. பாஸ்கர், பதிவாளர் சே. சந்தோஷ் பாபு ஆகியோர் பாராட்டினர். மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், உறுப்புக்கல்லூரிகளைச் சார்ந்த  உடற்கல்வி  இயக்குநர்கள் மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குநர் செ. துரை ஆகியோரும் பாராட்டினர்.

error: Content is protected !!