சென்னை: சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், தமிழ் பிராமி எழுத்தில் உருவாக்கப்பட்டுள்ள, ‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்’ என்ற நுாலை, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்டார்.உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், முதலாம் ஆண்டு முதுகலை தமிழ் படிக்கும் மாணவர்களில், தேர்வு செய்யப்பட்ட, 15 மாணவர்களுக்கு, கல்வித் தொகையாக, மாதந்தோறும், 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.தமிழறிஞர்கள், தமிழ்க்குடிமகன், மேலாண்மை பொன்னுச்சாமி, சவுரிராசன் ஆகியோரின் நுால்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்கான பரிசுத் தொகையாக, தலா, 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில், தமிழகத்தில் வழக்கத்தில் இருந்ததாக, தொல்லெழுத்து ஆய்வாளர்களால் தெரிவிக்கப்படும், தமிழ் பிராமி எழுத்தில் தான், திருக்குறள் எழுதியிருக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினர், தமிழ் பிராமி எழுத்தில், ‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்’ என்ற நுாலை உருவாக்கினர். அதை, முதல்வர் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் பங்கேற்றார்.

error: Content is protected !!