அறிவியல் ஆசிரியர் 10 பேருக்கு விருது – தமிழ்நாடு அறிவியல் நகரம்

தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில், நடப்பாண்டு முதல், பத்து அறிவியல் ஆசிரியர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், பரிசுத் தொகையுடன், ‘சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது’ வழங்கப்பட உள்ளது.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல் போன்ற துறைகளில், சிறந்த பத்து ஆசிரியர்களுக்கு, சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதும், 25 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என, ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்த, பரிசுத் தொகைக்கு, 2.50 லட்சம் ரூபாய்; இதர செலவினங்களுக்கு, 1.30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, பட்டியலை நவ., 30க்குள் அனுப்பும்படி, தமிழ்நாடு அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம், பள்ளிக் கல்வித் துறைக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இவ்விருது வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!