பிரிட்டன்-இந்தியா சமூக பயன்பாட்டுக்கான ஆராய்ச்சித் திட்டப் போட்டியில் சென்னை ஐஐடி, முதல் பரிசை பெற்று அசத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கழிவு மேலாண்மையில் சர்வதேச அளவில் எழுந்துவரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், அதுதொடர்பான ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கு நிதி உள்ளிட்ட ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் இந்த மதிப்புமிக்க பிரிட்டன்-இந்தியா சமூகப் பயன்பாட்டுக்கான ஆராய்ச்சித் திட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான இறுதிப் போட்டியில் 12 ஆராய்ச்சித் திட்டங்கள் இடம்பெற்றன.
இதில், சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தி கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கண்டுபிடிப்பை உருவாக்கிய சென்னை ஐஐடி குழு முதல் பரிசு பெற்றது.
கட்டுமான கழிவுகளிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான செங்கல்லை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!